ஸ்ரீராமரை தரிசனம் செய்ய இது தான் சரியான நேரம்... சிறப்பு ரயில் ஏற்பாடு

IRCTC special Ram Sethu express train on February 28 : ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய நினைப்பவர்களுக்கு ராமர் சேது விரைவு ரயில்...

IRCTC special Ram Sethu express train : ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய நினைப்பவர்களுக்கு ராமர் சேது விரைவு ரயில் சேவையை ஐஆர்சிடிசி வழங்குகிறது.

இந்தியன் ரயில்வே அளிக்கும் சிறப்பான சேவைகளில் முக்கியமான ஒன்று தான் ஐஆர்சிடிசி இணையதளம். இந்த இணையத்தளம் மூலம் பயணிகளுக்கு ரயில் டிக்கெட் பதிவு செய்வதை எளிமையாக்கி இருக்கிறது இந்தியன் ரயில்வேத்துறை.

IRCTC special Ram Sethu express train : ராமர் சேது விரைவு ரயில்

மேலும், பயணிகள் சுற்றுலா செல்லவும், ஆன்மீக வழிபாடு தளங்களுக்கு செல்லவும் சில அறிய வகை சேவைகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதே போன்ற சிறப்பான ஒரு ஆன்மீக சுற்றுலா செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அது தான் ராமர் சேது விரைவு ரயில். இந்த ரயில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலை தரிசனம் செய்ய பயனுள்ள வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ரயில்வே நிலையத்தில் இருந்து இந்த ரயில் புறப்படும்.

வரும் பிப்ரவரி 28ம் தேதி புறப்பட்டு மார்ச் 3ம் தேதி மீண்டும் அதே தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.  இது ஒரு சிறப்பு பாரத் தரிசனம் சுற்றுலா ரயில். இந்த பயணத்தில் மொத்தம் 15 கோவில்கள் செல்ல முடியும். தலா ஒரு நபருக்கு ரூ. 4,885 கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எப்படி மாற்றுவது?

இதில் சைவ உணவுகள் அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்படும். மேலும், பேருந்து மூலம் அனைத்து கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்படும். இந்த சேவையைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய, www.irctctourism.com என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம். அல்லது, 9003140681 / 680 தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close