Advertisment

IRCTC Tour: ரயில்வே சார்பில் ராமாயண ரத யாத்திரை... கட்டணம் இவ்ளோதான்!

IRCTC starts Ramayana yatra train tours timing price details here: மதுரையிலிருந்து ராமாயண ரத யாத்திரை; ஐஆர்சிடிசி –இன் பயண விவரம் மற்றும் கட்டணம் விவரம் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Tour: ரயில்வே சார்பில் ராமாயண ரத யாத்திரை... கட்டணம் இவ்ளோதான்!

ஐஆர்சிடிசி, ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக ஐஆர்சிடிசி பண்டிகை காலங்களில் 'ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் பயணங்கள்' தொடரைத் திட்டமிட்டுள்ளது.

Advertisment

ஸ்ரீ ராமாயண யாத்திரை மத சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் மூலம் ஐஆர்சிடிசியால் தொடங்கப்பட்டுள்ளது என்றும், இந்த பயணம் நவம்பர் 7, 2021 முதல் டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஆர்சிடிசியின் அறிக்கையின்படி, நவம்பர் 7, 2021 அன்று புதுடெல்லியில் இருந்து ராமாயண சுற்றுப்பயணத்தின் முதல் பயணமும் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நான்கு பயணங்களும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஐஆர்சிடிசி ராமாயண யாத்ரா மதுரை விரிவாக்கம் ஆனது, மதுரையிலிருந்து பட்ஜெட் பிரிவு ரயிலுடன் ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகளைக் கொண்டு இயக்க திட்டமிட்டுள்ளது. 12 இரவு அல்லது 13 நாட்கள் கொண்ட மதுரை விரிவாக்க ராமாயண யாத்திரை நவம்பர் 16, 2021 முதல் மதுரையிலிருந்து தொடங்கும்.

இப்போது, ​​வட இந்தியாவின் பட்ஜெட் பிரிவு சுற்றுலாப் பயணிகளுக்காக, ஐஆர்சிடிசி தனது யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில்களுடன் ராமாயண யாத்திரையை கங்காநகர் வரை விரிவாக்கம் செய்து இயக்குகிறது. 16 இரவுகள் அல்லது 17 நாட்கள் ஸ்ரீ ராமாயண யாத்திரை நவம்பர் 25 முதல் ஸ்ரீ கங்காநகரிலிருந்து தொடங்கும்.

மேலும், ஐஆர்சிடிசி ராம் பாத் யாத்திரை புனே விரிவாக்க யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில் ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஏசி மூன்று அடுக்கு கோச்சுகளை உள்ளடக்கியுள்ளது. 7 இரவுகள் அல்லது 8 நாட்கள் ஸ்ரீ ராம் பாத யாத்திரை நவம்பர் 27 முதல் புனேயில் தொடங்கும். டிசம்பர் 25 முதல் சபர்மதியிலிருந்து மேலும் 7 இரவுகள் அல்லது 8 நாட்கள் தொடங்கும்.

ஸ்லீப்பர் வகுப்பில் நிலையான வகை தொகுப்பு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு வரி தவிர்த்து ரூ .900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏசி -3 அடுக்குகளின் வசதியான வகை தொகுப்பு ஒரு பயணிக்கு ஒரு நாளைக்கு வரி தவிர்த்து ரூ .1500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ IRCTC இணையதளத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ramayanam Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment