இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு - இந்திய வீரருக்கு 3வது இடம்!

ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் 3வது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்தச் சுற்றில் IRL, ஃபார்முலா 4 மற்றும் ஃபார்முலா எல்ஜிபி4 பந்தயங்கள் நடைபெற்றன.

ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் 3வது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்தச் சுற்றில் IRL, ஃபார்முலா 4 மற்றும் ஃபார்முலா எல்ஜிபி4 பந்தயங்கள் நடைபெற்றன.

author-image
WebDesk
New Update
Kari Motor Speedway Race

இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு - இந்திய வீரருக்கு 3வது இடம்!

ஜே.கே டயர்ஸ் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் 3-வது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தத் திருவிழாவில் இந்தியன் ரேசிங் லீக் (IRL), ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், மற்றும் ஃபார்முலா எல்.ஜி.பி-4 அடங்கிய ஜே.கே டயர்ஸ் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் ஆகிய பந்தயங்கள் நடைபெற்றன.

Advertisment

கோவா ஏசஸ் ஜே.ஏ ரேசிங் அணியின் டிரைவரான ராவல் ஹைமன் (ஐக்கிய இராச்சியம்), இந்த சீசனின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தார். 2-வது நாள் நடந்த டிரைவர் பி பந்தயத்தை அவர் 26 நிமிடங்கள், 46.480 வினாடிகளில் முடித்து முதல் இடத்தை பிடித்தார். ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி அணியின் ஷஹான் அலி மொஹ்சின் 2வது இடத்தையும், கிச்சா'ஸ் கிங்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த இந்திய வீரர் ருஹான் ஆல்வா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்த சுற்றில் ஷேன் சந்தாரியா, இட்சுகி சாடோ, மற்றும் இஷான் மாதேஷ் ஆகியோர் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தனர்.

ஃபார்முலா எல்ஜிபி4 பிரிவில், எம் ஸ்போர்ட்ஸ் அணியின் துருவ் கோஸ்வாமி மற்றும் டார்க் டான் ரேசிங் அணியின் மெஹுல் அகர்வால் ஆகியோர் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பந்தயம் 3: பெங்களூரைச் சேர்ந்த துருவ் கோஸ்வாமி 22 நிமிடங்கள், 4.600 வினாடிகளில் வெற்றி பெற்றார். தில்ஜித் டி எஸ் இரண்டாவது இடத்தையும், மெஹுல் அகர்வால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Advertisment
Advertisements

பந்தயம் 4: இந்த வார இறுதியில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த மெஹுல் அகர்வால் முதல் இடத்தைப் பிடித்தார். அவரது அணியின் வீரர் தில்ஜித் இரண்டாவது இடத்தையும், கோஸ்வாமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்த சுற்றுப் பந்தயங்கள் கோவா ஓசன்ஃப்ரன்ட் ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி மும்பை ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இரவுப் பந்தயமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: