Arun Janardhanan
ஒருபுறம் பா.ஜ.க இந்து தேசியவாதமும், மறுபுறம் தி.மு.க.,வின் மொழி/பிராந்திய அரசியலும் இருப்பதால், தமிழகத்தின் ‘திராவிட’ அடையாளம் குறித்த சர்ச்சை தொடர்கிறது.
சில நாட்களுக்கு முன், தீயை மேலும் தூண்டும் வகையில் தன் பங்களிப்பை ஆற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, அதற்கு புதிய பரிமாணம் சேர்த்து, ‘யார் திராவிடன்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டு மக்களை மட்டும் குறிக்கிறதா அல்லது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை உள்ளடக்கியதா?
அக்டோபர் 10-ம் தேதி ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத் - இந்தியாவை இணைக்கும்’ தொடரின் இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பிரிவினை அரசியலால்” திராவிட அடையாளம் முற்றிலும் தமிழ் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறினார்.
தி.மு.க அரசாங்கத்திற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல்போக்குகள் இருந்து வரும் நிலையில், தி.மு.க உடனடியாக திருப்பித் தாக்கியது, தி.மு.க தலைவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியை "தமிழ்நாடு ராஜ்பவன் இடத்தை ஆக்கிரமித்துள்ள ஆர்.எஸ்.எஸ் நபர்" என்று அழைத்தனர்.
தி.மு.க.,வைப்போலவே திராவிட அரசியலுக்கு உரிமைகோருபவர்களான அ.தி.மு.க, இப்போது தமிழகத்தில் பா.ஜ.க தோள்களில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள், அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக எழுந்தார்கள்.
ஆளுநர் கூறியது சரிதான், திராவிட சித்தாந்தம் உண்மையில் ஐந்து தென் மாநிலங்களை உள்ளடக்கிய புவியியல் கட்டமைப்பாகும் என்று அ.தி.மு.க தலைவர்கள் கூறினர்.
ராஜ்பவனில் ஆற்றிய உரையில், தேசத்தை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள, “ஒருவர் பாரதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிகம் மற்றும் பெருமையைக் குறிப்பிட்டார்.
இந்தியாவை அரசியல் ரீதியாக பிரித்ததற்காக பிரிட்டனை அவர் குற்றம் சாட்டினார், மேலும் திராவிடம் என்பது முதலில் தென் மாநிலங்களைக் குறிக்கும் அதே வேளையில், "இன்று அது தமிழர் அடையாளமாக" மாறிவிட்டது என்று கூறினார்.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, எல்லா விவாதங்களையும் போலவே, அரசியல் உண்மை விஷயங்களில் நுழைகிறது, இரு தரப்பிலும் சில உண்மைகள் உள்ளன.
'திராவிடம்' அல்லது 'திராவிடர்' என்பதன் தோற்றம் இடஞ்சார்ந்த மற்றும் மொழியியல் என இரு அம்சங்களாகப் பிரிக்கப்படலாம் என தமிழகத்தின் தொன்மையான கடந்த காலத்தைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட வரலாறு மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர் ஒருவர், அரசியல் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் கூறினார். திராவிடம் என்ற சொல் முதலில் தமிழ் அல்ல, ஆனால் இந்தியாவின் பண்டைய மொழியான பிராகிருதத்திலிருந்து பெறப்பட்டது, பிராகிருதம் பின்னர் சமஸ்கிருதத்திற்கு மறுவடிவமைக்கப்பட்டது, இது உயர் சாதியினர் மற்றும் அரண்மனையின் மொழியாக மாறியது.
சுவாமிநாத அய்யரின் திராவிடக் கோட்பாடுகள் உட்படப் பல ஆய்வுகள் மற்றும் புத்தகங்கள், திராவிடர் என்ற சொல்லின் தோற்றம் பற்றிப் பேசுகின்றன, இது படிப்படியாக 'தமிழா', 'தமேலா', 'தமேடா' என்று மாறி, 'தமிழ்' என்ற சொல்லின் திரிபு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது. '.
தற்செயலாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வங்காளதேசம் முதல் இலங்கை மற்றும் இந்தியா வரையிலான அனைத்து ஆரம்பகால கல்வெட்டுகளும் பிராகிருதத்தில் இருந்தாலும், தமிழ்நாடு விதிவிலக்காக உள்ளது. தமிழகத்தில் ஒரு பிராகிருத கல்வெட்டு கூட கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக, கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத கல்வெட்டுகளை கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளில் காணலாம்.
அதே நேரத்தில், தமிழ் மொழியின் ஆரம்பகால சான்றுகள் கி.மு.600 ஆண்டுகளுக்கு பின்னால் செல்கின்றன, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கான ஆரம்பகால சான்றுகள் கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து மட்டுமே உள்ளன.
மொழியியல் ரீதியாக, தமிழில் கிடைக்கும் பல சிறப்பு எழுத்துக்கள் மற்ற மொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தின் கிளைகளில் இல்லை என்பதையும், அதற்கேற்ப, சமஸ்கிருதத்தில் உள்ள ‘க’ (ga) போன்ற பல எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
சுமார் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே சென்னைப் பகுதிக்கு அருகில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த பேராசிரியர் கூறுகிறார்.
"அவர்கள் நிச்சயமாக ஒரு மொழியைப் பேசுகிறார்கள். தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு ஆகிய மொழிகள் அனைத்தும் கி.மு.1000க்கு முன்பே ஒரே மொழியிலிருந்து பிரிந்தன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அது எப்போது நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது பற்றிய சான்றுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தமிழுக்குப் பிறகு கன்னடமும் தெலுங்கும் வந்தன என்ற முடிவுக்கு எதிராக எச்சரிக்கும் நிபுணர் கூறுகிறார்.
உதாரணமாக, மேலும் “கிமு 1500 க்கு முந்தைய ரிக்வேதத்திற்கான மிகப் பழமையான எழுத்து ஆதாரம், குஜராத்தில் கி.பி 1 ஆம் நூற்றாண்டிலிருந்து மட்டுமே. ஏனென்றால், ரிக் வேதம் எழுதப்படவில்லை மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாய்வழியாக அனுப்பப்பட்டது… வரலாறு என்பது கார்பன் தடயங்கள் மட்டுமல்ல, வாய்வழி வரலாறுகள், கலாச்சாரம் மற்றும் நினைவுகள் ற்றியது,” என்றும் அந்த நிபுணர் கூறுகிறார்.
அவர் மேலும் மலையாளத்தின் உதாரணத்தை தருகிறார், ஒரு காலத்தில் அது மிகவும் "ஆரியர் அல்லாத சொற்களை" கொண்டிருந்தது, ஒரு காலக் கட்டத்தில் அப்படி பேசப்பட்டது. "ஆனால் இடைக்காலத்தில், நம்பூதிரி பிரிவினர் சமஸ்கிருதத்தைத் தழுவினர், சுமார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில், அடிப்படையில் மலையாளத்தின் தன்மையை மாற்றியமைத்தனர்," என்றும் நிபுணர் கூறுகிறார்.
மேலும், பிந்தைய காலகட்டத்தில், இந்து மதத்தின் கடினத்தன்மையை சீர்திருத்த ஒரு இயக்கத்திலிருந்து தோன்றிய புத்தமதம், பிராகிருதத்தை அதன் மைய மொழியாக ஏற்றுக்கொண்டது என்றும் பேராசிரியர் கூறினார்.
இதற்கிடையில் சமஸ்கிருதம் பரவுவதை தமிழ் தலைவர்கள் எதிர்த்தனர். “பல்லவர்கள் சமஸ்கிருதத்தை கடுமையாக எதிர்த்ததால்தான் தேவாரம், திவ்யபிரபந்தம், திருவாசகம் போன்ற சமய நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே முக்கிய காரணம்.
ஏனென்றால், அப்போது ஒரு மொழி என்பது வாழ்வதற்கான வழியைக் குறிக்கிறது. உங்கள் மருந்துகள், விவசாய நுட்பங்கள், மழைக்கால பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்கள் அனைத்தும் அந்த உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்டுள்ளன,” என்றும் பேராசிரியர் கூறுகிறார்.
அந்த வகையில், திராவிடம் என்பது ஒரு மொழியியல் கருத்தாக இருந்ததாகத் தோன்றுகிறது, அது பின்னர் ஒரு குறிப்பிட்ட புவியியலுக்குள் அடங்கிவிட்டது.
எவ்வாறாயினும், அது நடக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு விவாதம் எந்த நேரத்திலும் தீர்க்கப்பட வாய்ப்பில்லை.
தி.மு.கவின் மூத்த தலைவர் ஆ.ராஜா சில வாரங்களுக்கு முன்பு, “நீங்கள் இந்துவாக இருக்கும் வரை, நீங்கள் ஒரு சூத்திரர்” என்று கூறியதோடு, “சனாதன தர்மத்தின் வேர்களை அழிக்க இதுபோன்ற அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்றும் பேசியதிலிருந்து சமீபத்திய சுற்று கருத்து மோதல்கள் தொடங்கியது.
பா.ஜ.க உடனடியாக அதை தி.மு.க/.வின் "இந்து விரோத குணாதிசயத்துடன்" இணைத்தது, தி.மு.க தலைவர்கள் நாத்திகத்தை கடைப்பிடிக்கிறார்கள் மற்றும் வலுவான பிராமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு உணர்வில் இருந்து பிறந்து, பின்னர் ஒரு பிராந்திய தன்மையைப் பெற்றனர்.
பின்னர், கல்கியின் சோழர் கால வரலாற்றுப் புனைகதை நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் I (PS-I) திரைப்படத்தின் வெளிச்சத்தில், விருது பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாகக் கொண்ட இந்துத்துவாக் குழுக்களுக்கு எதிராக தமிழர்களை எச்சரித்தார். இதற்கு பா.ஜ.க.,விடம் இருந்து தீவிர எதிர்வினை வந்தது.
அனைத்து கலைகளும் அரசியல் சார்ந்தது, தமிழர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் சின்னங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வெற்றிமாறன் கூறினார். "நாம் அதைச் செய்யாவிட்டால், அவர்கள் (இந்துத்துவா குழுக்கள்) நமது சின்னங்களை எடுத்துக்கொள்வார்கள்," என்று வெற்றிமாறன் கூறினார்.
தமிழ்நாட்டின் கரூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எஸ்.ஜோதிமணி விவாதத்தில் பங்கேற்று, ராஜ ராஜ சோழனை "தமிழ் மன்னன்" என்று அழைத்தார். “தமிழக வரலாறு பற்றி பா.ஜ.க.,வுக்கு எதுவும் தெரியாது. அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அவர்களுக்கு வெறுப்பு மட்டுமே முக்கியம், ”என்று கூறினார்.
மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான எல்.முருகன், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்துக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றபோது, “தமிழும் இந்துவும் எப்படி வேறுபடும்?” என்று திருப்பிக் கேட்டார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமு.க ஆட்சிக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் பின்னணியிலும் விவாதம் நடைபெற்று வருகிறது.
முன்னாள் போலீஸ் அதிகாரியான ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக இருந்தபோதும் சர்ச்சையில் சிக்கியவர், மாநில அரசால் கடுமையாக எதிர்க்கப்பட்ட சில மத்திய கொள்கைகளைப் புகழ்ந்து குரல் கொடுத்தவர்.
இதில் பொதுவான நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) ஆகியவை அடங்கும். தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதையும் அவர் தாமதப்படுத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.