இயற்கையான முறையில், கிடைக்கும் வெல்லத்தில் மெக்னீஷியம், பொட்டாஷியம், இரும்பு சத்து உள்ளது. இந்நிலையில் இது மட்டும் அல்லாது, காற்று மாசுபாட்டால் ஏற்படும் தொண்டை வலி மற்றும் எரிச்சலை குணப்படுத்துகிறது.
இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை சிறிய அளவு வெல்லம் சாப்பிட்ட பிறகு 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி செய்தால் நமது சுவாச பாதையில் உள்ள மாசுபடுத்தும் பொருட்களை வெளியேற்ற உதவுவதாக கூறப்படுகிறது.
நாம் வெளியே பயணிக்கும்போது காற்றில் உள்ள ரசாயின நஞ்சுகளை ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. தொண்டை மற்றும் நுரையீரலை இயற்கையாக சுத்தம் செய்கிறது. தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சுவாசப் பாதையில் உள்ள விக்கத்தை குறைக்கிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மாசுபாட்டில் இருந்து நமது நுரையீரலை காப்பாற்றுகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், அஜீரணம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
வெல்லத்தை, சூடான தண்ணீர், துளசி இலைகள், இஞ்சியுடன் சேர்த்து குடித்தால், மூக்கு, கண்கள், வாய் சமந்தமான எல்லா சிக்கலுக்கும் தீர்வாக இருக்கும். தொண்டையில் ஏற்படும் எரிச்சல், இருமலை இது தடுத்து, நல்ல நிவாரணம் கொடுக்கும்.
இதுபோல வெல்லம், ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துகொள்ளலாம். வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“