scorecardresearch

கூடங்குளம் அணுக் கழிவுகள் பாதுகாப்பாக கையாளப்படுகிறதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வது பற்றி மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?

கூடங்குளம் அணுக் கழிவுகள் பாதுகாப்பாக கையாளப்படுகிறதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வது பற்றி மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடங்குளம் அணுக்கழிவு சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலப்பதாக பூவுலகின் நண்பர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், அணுக்கழிவுகள் சரியாக பாதுகாக்கப்படுகிறதா என ஜூலை முதல்வாரம் அறிக்கை தர தேசிய அணுசக்தி முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Is koodangulam nuclear waste handlling properly

Best of Express