முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் தொடர்பாக சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் பயணம் பற்றி வதந்தி பரப்பியதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பாஜகவை சேர்ந்தவர் அருள் பிரசாத். தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் மேற்கொண்ட துபாய் பயணம் பற்றி தவறாக விமர்சித்துப் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்று இருந்தார். கடந்த நான்கு நாட்களாக பல்வேறு சந்திப்புகள், அவர் துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தினார்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து நிறைய வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் தனது தனி விமானத்திற்கு அரசின் பல கோடிகளை செலவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்பட்டன.
இந்நிலையில்தான் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத் என்பவர் முதல்வர் ஸ்டாலினின் உடை குறித்து வதந்தி பரப்பி இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் அணிந்து இருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என்று பொய்யாக ட்வீட் செய்து இருந்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றின் கார்டை எடிட் செய்து அதில் முதல்வரின் ஜாக்கெட் 17 கோடி ரூபாய் என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்ததாக பொய்யாக டைப் செய்து வதந்தி பரப்பி இருந்தார். இதை பலரும் ஷேர் செய்திருந்தனர்.
அண்ணாமலை பல்கலை. தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை; மாணவர்கள் சேர வேண்டாம்; UGC எச்சரிக்கை
இதையடுத்து, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில், பாஜக நிர்வாகி அருள் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடிஆரின் புகாரை தொடர்ந்து, பொய்யான செய்தியை பரப்பி அவதூறு செய்ததாக கூறி பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களை தடுக்க ‘சமூக ஊடக சிறப்பு மையம்’ அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil