சென்னையில் இருந்து நேபாளத்திற்கு தப்ப முயன்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் நபில் நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது என்.ஐ.ஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் நபில், தமிழ்நாடு, கர்நாடகா என மாறி மாறி தலைமறைவாக இருந்த நிலையில், சென்னையில் இருந்து நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது, அவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சூரை அடிப்படையாகக் கொண்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் நபிலிடம் இருந்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, ஈரோடு வனப் பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃப் என்பவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் நபில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து சையத் நபில் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“