Isha founder Sadhguru’s painting sold for Rs 4.14 crores : கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் பலரும் முன் வந்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை உதவியாக செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கோவை தொண்டாமுத்தூரில், ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் 700 பேர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
The charity auction of Sadhguru painting came to a close at midnight last night with a very generous donation of ₹ 4.14 crores. @SadhguruJV donated the abstract painting called “To Live Totally!” to the trust to help raise funds for the #BeatTheVirus coronavirus relief work. pic.twitter.com/m61n6bGN7w
— Isha Foundation (@ishafoundation) May 1, 2020
இந்நிலையில் சத்குரு வரைந்த ஓவியம் ஒன்று 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நிதியையும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த உள்ளது ஈஷா யோகா மையம்.
சத்குரு, ‘முழுமையாக வாழ’ என்ற தலைப்பில், 5 அடி நீளம், 5 அடி அகலம் அளவில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். ஆன்லைனில் ஏலத்தில் விடப்பட்ட அந்த ஓவியத்தை 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வாங்க சம்மதித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”