IETamil Facebook live Director Radhakrishnan Parthiban exclusive
IETamil Facebook live Director Radhakrishnan Parthiban exclusive : ஒரு நல்ல நடிகன் அல்லது தேர்ந்த கலைஞன் என்பவன் என்றும் தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து “அனைத்தையும் அப்சர்வ்” செய்யும் ஒருவனாகவே வாழ்ந்து வருகிறான். நடிப்பு என்பது திரையில் தோன்றுவது மட்டுமல்ல, ஒரு இடத்தில், ஒரு நிகழ்வு ”இப்படி” அரங்கேறிவிட்டால், ஒரு சராசரி மனிதன் என்ன செய்வான் என்று யோசிக்கும் இயக்குநரின் சிந்தனையோட்டத்தோடு ஒரு நடிகன் செயல்படுவதும் மிக முக்கியமாகும்.
ஒரு நடிகராகவும், தேர்ந்த கலைஞராகவும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கும் பார்த்திபன் மேலே கூறிய இரண்டையும் பிசிறில்லாமல் செய்ய கூடியவர். அதனால் தான் “ஒரு இயக்குநராக” தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் உரையாடல்களை, நிகழ்வுகளை, சம்பவங்களை, திரையுலகின் கஷ்டங்களை திரைப்படமாக்கி தந்திருப்பார். 2014ம் ஆண்டு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வெளியான போது, இது தான் எதார்த்தம். நீங்கள் நினைப்பது போல் இயக்குநர்கள் விலையுர்ந்த காரில் வந்தமர்ந்து, 5 ஸ்டார் ஹோட்டலில் டிஸ்கசன் நடத்துவதில்லை என்று வருங்கால இயக்குநர்களுக்கு சரியான பாடத்தினை படம் மூலம் கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
பிம்பங்களை உடைத்தெறிதலுக்கும் முயற்சிகள் தேவை. நாம் நினைத்திருப்போமா? தமிழ் சினிமாவில் என்றேனும் ஒரு நாள், ஒரு அறையில், ஒரே ஒரு மனிதன், முழுக்க முழுக்க அவனை மட்டுமே காட்டி, ஒரு படம் வெளியாகும் என்று? அந்த படம் க்ரிடிக்ஸ் மற்றும் வர்த்தக ரீதியிலும் வெற்றி அடையும் என்று நினைத்திருப்போமா? நினைத்தும் கூட பார்த்திராத ஒன்றை நிகழ்த்தி காட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பார்த்திபன். “ஒத்த செருப்பு சைஸ் 7”, இன்று நினைத்து பார்க்கும் போது, எப்படி சாத்தியப்பட்டது இந்த ஐடியா என்று தான் தோன்றுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
இயக்குநர், முதன்மை கதாப்பாத்திரம் என்று மட்டும் நின்றுவிடாமல், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படத்தில், வஞ்சிக்கப்பட்ட சோழனாக, விடிவெள்ளியை தேடி நிற்கும் அந்த கண்களுக்கு சொந்தகாரராக நடித்து வியப்பில் ஆழ்த்திய சிறந்த நடிகர் பார்த்திபன். திரையுலகில் வெற்றியும் தோல்வியும் முயன்று கொண்டே இருப்பதில் மட்டும் தான் இருக்கிறது. விடாமுயற்சியுடன் வலம் வருபவர்கள் நிலைத்து நிற்கிறார்கள். மக்கள் கொண்டாடும் மாபெரும் கலைஞராக நிலைத்து நிற்கும் பார்த்திபனின் நேரலை இங்கே!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
அழகிக்கு முன்னும் பின்னும் ஆயிரம் சறுக்கல்கள். ஆனாலும் சமாளித்தது எப்படி? இன்று தமிழ் திரையுலகை நம்பி தன் எதிர்காலத்தை திட்டமிடும் ஒரு இளைஞனுக்கு கூற விரும்புவது என்ன? அழகி போன்ற படங்கள் வருங்காலத்தில் சாத்தியமா? பாரதி கண்ணம்மா, வெற்றி கொடிகட்டில் இருப்பது போன்ற டைமிங் "கவுண்ட்டர்களை" எங்கு கற்றுக் கொள்கிறார் என்பது போன்ற பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொண்டார்.