இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு
இஸ்லாமிய அமைப்புகள் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Islamic organizations political parties call for seize assembly, சிஏஏ எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் அழைப்பு, case file to ban on assembly seize protest, caa protest, protest against caa, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு,
இஸ்லாமிய அமைப்புகள் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிஏஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் வரும் 19-ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து இது தொடர்பாக வராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த போராட்டங்கள் சட்டவிரோதாமக நடப்பதாகவும், இதில் சிலர் உயிரிழந்தாக தவறான தகவலையும் அரசியல் கட்சி பிரிதிநிதிகளே பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சியினர் கூட்டாக இணைந்து சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.
இத்தகைய போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படும் என்பதால் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.