Advertisment

இஸ்ரேல் போர் : தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை; உதவி எண்கள் அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க கோரி 15 தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்- தமிழ்நாடு அரசு

author-image
WebDesk
Oct 08, 2023 09:15 IST
New Update
Israel war

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி நேற்று தீடீரென பாலஸ்தீன ஆதரவு குழு  7,000 ஏவுகணைகள் வீசியதால் இருநாடுகளுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா- உக்ரைன் போர் 1 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இப்போது இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இந்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து அங்குள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.  இஸ்ரேலில் 15 தமிழர்கள் உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அயலக தமிழர் நலவாரிய அதிகாரிகள் கூறும்போது, “ இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க கோரி 15 தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். 15 நபர்களும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். 15 நபர்களும் பாதுகாப்பாக இருந்தாலும், போர் தீவிரமடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொள்பவர்களை தூதரகம் மூலம் இஸ்ரேலில் இருந்து மீட்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வாழ் தமிழர்கள் 91-87602 48625, 91-99402 56444, 91-96000 23645 என்ற தொலைபேசி எண்களிலும்,  nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment