திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 21 வது பட்டமளிப்பு விழா என்.ஐ.டி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் 2045 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
விண்வெளித்துறையின் செயலாளரும், இஸ்ரோவின் தலைவருமான டாக்டர் வி. நாராயணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; வரும் 30ம் தேதி இஸ்ரோ நாசா சேர்ந்து NISAR சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளோம். ஜி.எஸ்.எல். F16 வரிசையில் பதினெட்டாவது ராக்கெட் இது. இந்த ராக்கெட் நிலநடுக்கம், பேரிடர் குறித்த தகவல்களை தரக்கூடிய செயற்கைக்கோள்.
இஸ்ரோவில் இந்த வருடம் 12 ராக்கெட்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் உள்ள செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்தியாவில் தயாரித்து இந்தியர்களை அனுப்பக்கூடிய ககன்யான் திட்ட மூலம் ககன்யான் ஜி 1 ஆளில்லாமல் ரோபர்ட் வைத்து டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிந்து ஆபரேஷனுக்கு பிறகு இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். சிந்தூரில் நம்முடைய சேட்டிலைட் துல்லியமான தகவல்களை கொடுத்தது. நான்கு வருடத்திற்குள் இன்னும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோளை ஏவயுள்ளோம். மக்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம்.
அதற்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தையும் இஸ்ரோ செய்து கொண்டிருக்கிறது. ககன்யான் திட்டத்தின் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் பாரத பிரதமர் கொடுத்துள்ளார். அதிக ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். வெற்றிகரமாக செல்லக்கூடிய செயற்கைக்கோள்களின் ஆராய்ச்சிகள் முடிந்து விட்டது. மனிதர்களை வைத்து அனுப்ப கூடிய ராக்கெட்களின் ஆராய்ச்சிகளும் முடிந்துவிட்டது.
மனிதர்களுடன் விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பும் பொழுது பாதுகாப்பு மிக அவசியம். அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக மாற்று ராக்கெட் கொண்டு செல்வது உள்ளிட்டவைகள் ஆராய்ந்து தயார் நிலையில் உள்ளோம்.
உலகத்தில் விண்வெளி துறையில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது விண்ணில் ஏவிய ராக்கெட்டை நிறுத்தி அதில் ஏற்படும் குறைகளை சரி செய்து மீண்டும் விண்ணில் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இந்திய விஞ்ஞானிகள்.
அப்துல் கலாம் அவர்கள் கூறியதுபோல் உலகிலேயே விண்வெளி துறையில் இரண்டாவது சாதனை புரியும் நாடாக உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குனர் டாக்டர் அகிலா மற்றும் என்ஐடி கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்