இஸ்ரோ மையத்தில் சமீபத்தில் சாதித்த விஞ்ஞானிகள் தமிழ் மொழி பாடத்தில் படித்தவர்களே என சொல். வேந்தர் சுகி சிவம் கோவை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுட்டிகாட்டியுள்ளார்
கோவை பிச்சனூர் பகுதியில் உள்ள ஜே.சி.டி.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சொற்பொழிவாளர் சொல் வேந்தர் சுகி சிவம் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது மாணவ,மாணவிகள் கல்லூரி காலத்தில் படிப்பதை மட்டுமே கவனத்தி்ல் கொள்ள வேண்டும் எனவும்
பெற்றோர்களின் கனவை நனவாக்குவது மட்டுமே மாணவ,மாணவிகள் இலட்சியமாக கொள்ள வேண்டும் என்றார். அன்றைய பாடங்களை அன்றே படிப்பதின் அவசியத்தை சிறுகதை வாயிலாக கூறிய அவர்,படிப்பது மட்டுமின்றி விளையாட்டு,கலை நிகழ்ச்சிகளில் மாணவ,மாணவிகள் தங்களை ஈடுபடுத்தும் போது மன அழுத்தங்களில் இருந்து விடுபட முடியும் என தெரிவித்தார்.
ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளை கற்பது எளிதான காரியம் என்ற அவர்,இஸ்ரோ போன்ற பெரிய மையங்களில் சமீபத்தில் சாதித்த விஞ்ஞானிகள் தமிழ் மொழி பாடத்தில் படித்தவர்களே என்பதை சுட்டிகாட்டினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் அருள் செல்வன், செயலாளர் துர்கா சங்கர் முதல்வர் மனோகரன்,நிர்வாக அலுவலர் சந்திரஹாசன் உட்பட பெற்றோர்கள்,மாணவ,மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“