சிக்கிய கல்வி குழுமம், பல கோடி கணக்கில் காட்டாத பணம்: வருமான வரித்துறை அதிரடி

சென்னையில் முன்னணி கல்வி குழுமத்திடம் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 500 கோடி வரை கணக்கில் காட்டப்படடாத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக தெரிய வந்திருக்கிறது.

சென்னை சேர்ந்த ஒரு முன்னணி கல்வி குழுமம் வருமான வரி முறைகேடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து, அக்கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் வரித்துறையினர் அதிரடி  சோதனையில் ஈடுபட்டனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வேகமெடுக்கும் விசாரணை, டிபிஐ ஆவண கிளார்க் கைது

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 500 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக தெரிய வந்திருக்கிறது. மேலும், இரண்டு கோடி ரொக்க பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மொத்தம் 250 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து,   கல்விக் குழுவின் நிர்வாக இயக்குநரின் வளாகம் உட்பட 64 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நட்டத்தியதாக கூறப்படுகிறது .

அதிகாரிகளின் கூற்றுப்படி, வருமான ​​வரியைத் தவிர்ப்பதற்காக மாணவர்களிடமிருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும், மாணவர்களிடமிருந்து கல்வி கட்டணமாக பெற்ற பணங்கள் (ரொக்கம்) எவையும் கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்த கணக்கு காட்டப்படாத பண மதிப்புகள் சொத்து வாங்குவதற்கும்,கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும்  பயன்பட்டுள்ளது.

தமிழகத்தின் 24 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின காவலர் பதக்கம்

அந்த கல்வி குழுமம் தமிழகத்தில் மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை நடத்தி வருகின்றது. சென்னை, மதுரை, தேனி, தஞ்சாவூர் மற்றும் பல இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

தற்காலிகமாக, இந்த சோதனை முடுவுபெற்றுள்ளதாக கூறிய வருமான வரித்துறை, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close