மவுனம் கலைத்தார் ரஜினி : பெரியார் சிலையை அகற்றச் சொல்வது காட்டுமிராண்டிதனம்

பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொன்னதும் அதனை சேதப்படுத்தியதும் காட்டுமிராண்டிதனம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பேட்டியில் ரஜினி கூறியுள்ளார்.

rajinikanth, tamil nadu news today live
tamil nadu news today live

பெரியாரின் சிலையை அகற்றச் சொல்வது காட்டுமிராண்டித்தனமானது என்று நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு பின்னர் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

திரிபுராவில் பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்றது. இதையடுத்து அங்கிருந்த லெனின் சிலையை சிலர் அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார், பி.ஜே.பி. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது, பிஜேபி தலைவர்களே ராஜாவை கண்டித்தார்கள்.

இந்நிலையில் திருப்பத்தூரில் பெரியார் சிலையை பிஜேபி பிரமுகர் உடைக்க முயற்சி செய்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பெரியார் சிலை அகற்றப்படும் என ஹெச்.ராஜா பதிவிட்டதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். ஆனால் கட்சி தொடங்கப்போவதாக சொன்ன ரஜினி, இது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதை அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இன்று காலையில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய ரஜினியிடம் நிருபர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொன்னதும் அதனை சேதப்படுத்தியதும் காட்டுமிராண்டிதனம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார். எனவே அதனை பெரிதாக்க வேண்டாம்’’ என்று பதிலளித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: It is barbaric to say the removal of periyar statue rajini

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com