தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க.வின் மூத்த அமைச்சரான துரை முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.
அப்போது ஆளுனர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியானதே என்ற கேள்விக், “நான் ஆளுனர் ஆர்.என். ரவியை சந்திக்கவில்லை. கடந்த 2 நாள்களாக நான் சென்னையில் இல்லை.
திருநெல்வேலியில் இருந்தேன் என்றார். தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. அது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்றார்.
தொடர்ந்து மன்னார்குடி டி.ஆர். பி ராஜா அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு, “என்ன தமாஸ் பண்ணீரீங்களா? எல்லா கேள்விக்கும் நீங்களே விடை வைத்துள்ளீர்களா? என்றார்.
இதற்கிடையில் அமைச்சரவை மாற்றத்தால் மூத்த அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளார்களே என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை” என்றார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.
அதேநேரம், மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“