எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக அங்கம் வகித்த மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில் நுட்பத் துறையையும் சேர்த்து கவனிப்பார் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், எதற்காக என்னை பணிநீக்கம் செய்தார்கள் என தெரியவில்லை என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்திருந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல் முறை.