சென்னையில் உள்ள இரண்டு கல்விக் குழுமங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தக் கல்விக் குழுமங்கள் மாணவர்களிடமிருந்து பெரும் தொகையைக் கட்டணமாக வசூலிக்கும்போது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார்களை அடுத்து சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள இரண்டு கல்விக் குழுமங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சோதனையின் போது இரு கல்வி குழுமங்களிடமிருந்தும் ரூ.20 கோடி ரொக்கம் மற்றும் பல கிலோகிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கிடப்படாத கட்டண ரசீதுகள் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சோதனை மூலம் நிறுவனங்களின் அறக்கட்டளைகளில் இருந்து ஏராளமான பணம் திருப்பி அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு மிகப்பெரியதாகக் கருதப்படுவது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தேடுதலுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய வருமான வரித்துறை அதிகாரிகள், இரு கல்வி குழுமங்களிலும் தேடுதல் தொடர்கிறது. கடந்த காலங்களிலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத ஏராளமான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்று தெரிவித்தனர்.
அரசு ஒப்பந்ததாரரான சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆங்கில செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“