IT Raid at AMMK Office: தி.மு.க பொருளாளர் துரை முருகன் வீட்டில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, அ.ம.மு.க அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளது.
வேலூர் தொகுதியில் நடைபெற்ற சோதனையை அடுத்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் நேற்றிரவு தூத்துக்குடியின் திமுக வேட்பாளார் கனிமொழியின் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. ஆனால் அங்கே எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை செய்யபோது, அங்கிருந்தவர்கள் தள்ளியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டன.
சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியதையடுத்து, போலீஸார் அந்த சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று காலை வரை நடந்த சோதனையில் 1.48 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
நேர்த்தியாக பேக் செய்யப்பட்டிருந்த கவரில் வார்டு நம்பர், மொத்தம் எத்தனை வாக்காளர்கள் என்பதுடன் ரூ.300 என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இப்படி ஏராளமான கவர்கள் அங்கே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் உட்பட 7 பிரிவின் கீழ் அமமுக-வைச் சேர்ந்த 150 பேர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.