Advertisment

ஐ.டி ரெய்டு: தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகனின் புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் சோதனை

புதுச்சேரி ஊசுட்டேரி அருகே உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை; தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமானது

author-image
WebDesk
New Update
Tamil Nadu CB-CID issues summons to DMK MP Jagathrakshakan - எம்.ஜி.ஆர். காலத்து சர்ச்சை - திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

புதுச்சேரி ஊசுட்டேரி அருகே உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை; தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமானது

புதுச்சேரியில் உள்ள தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Advertisment

வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஊசுட்டேரி அருகே உள்ள அவருக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி சோதனையை அடுத்து கல்லூரியில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வெளியிலிருந்து கல்லூரிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி வாயில் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விடுதியிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry It Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment