IT Raid at Tamil cinema producers offices: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் தயாரிப்பு நிறுவனம் கோபுரம் பிலிம்ஸ். இந்த கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: நயன்தாரா- விக்கி நிஜக் காதலை மூட்டிவிட்டதே இந்த தாத்தாதான்; ‘நானும் ரவுடிதான்’ ஃப்ளாஷ்பேக்
இந்த நிலையில், அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் காலை 5 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அன்புச்செழியனைத் தொடர்ந்து தமிழ் திரைத்துறையின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி தாணுவின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய இருவரது அலுவலகங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருவது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil