தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில், தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும்(நவ.4) தொடர்ந்து வருகிறது.
![Cbe dmk3.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/w4TGUxRSC1G2Qm9NKp38.jpeg)
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தி.மு.க பிரமுகர் மீனா ஜெயக்குமார் இல்லம், அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசா கிராண்ட் அலுவலகம், கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் இல்லம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
![Cbe dmk1.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/FZpdDSkQDaIdSoRfpvRe.jpeg)
இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.மு.க பிரமுகர் மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லம், தி.மு.க பிரமுகர் எஸ்.எம்.சாமி இல்லம் ஆகிய இரு இடங்களில் மட்டும் சோதனை நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
![Cbe dmk2.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/AHY4AbGrCn3yr3bak4Sb.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“