சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ஐ.டி ரெய்டு

IT Raid in Chennai Saranava Stores Shops and Offices Tamil News சென்னையில் டி-நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலை உள்ளிட்ட இடங்களில் 7 கடைகள் இயங்கி வருகின்றன.

IT Raid in Chennai Saranavan Stores Shops and Offices Tamil News
IT Raid in Chennai Saranavan Stores Shops and Offices Tamil News

IT Raid in Chennai Saranava Stores Shops and Offices Tamil News : சென்னை புரசைவாக்கம், டி-நகர், போரூர் மற்றும் குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மிகவும் பிரபலமான வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட இந்த சரவணா ஸ்டோர்ஸ் தற்போது பல்வேறு கிளைகளுடன் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருள்கள் முதற்கொண்டு ஆடை, ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. சென்னையில் டி-நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலை உள்ளிட்ட இடங்களில் 7 கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இன்று, புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை, டி-நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, கணக்கில் வராத முதலீடு உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் சோதனையின்போது கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: It raid in chennai saranava stores shops and offices tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com