அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தில் உள்ள 40 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எ.வ. வேலூவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருவாமன் வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவும் வருமான வரி சோதனை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“