சசிகலாவின் நெருங்கிய குடும்ப உறவினர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில், 3-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) தொடரும் சோதனையால் அக்குடும்பத்தினருக்கு நெருக்கடி முற்றுகிறது.
சசிகலவைன் உறவினர்கள் விவேக், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லம், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வருமான வரித்துறையிபர் சோதனையில் ஈடுபட்ட இடங்கள், இன்று சோதனையில் ஈடுபட்ட இடங்கள் எவை என்று பார்ப்போம்
- மொத்தம் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், இன்று 50 இடங்களில் 3-வது நாளாக தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
- நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி அலுவலகங்களில் நேற்று நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்பு மீண்டும் இன்று சோதனை தொடர்கிறது.
- கோடம்பாக்கத்தில் ஜெயா டிவி மேலாண் இயக்குநர் விவேக் வீடு, அண்ணா நகரில் உள்ள விவேக் மாமனார் வீடு, தியாகராய நகரில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடு, போயஸ்தோட்டத்தில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றன் வீடு, ஜாஸ் சினிமா தலைமை அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்தது.
- ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் சோதனை நேற்று மாலையில் நிறைவடைந்ததையடுத்து அங்கு சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
-கொடநாடு எஸ்டேட்டுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேதனை மேற்கொண்டனர்.
- தினகரனின் உறவினர்கள் பாஸ்கரன், வெங்கடேஷ் வீடுகளிலும் சோதனை தொடர்ந்தது.
- நீலாங்கரையில் உள்ள ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் வீட்டில் 9 அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
- ஈரோடு மாவட்டம் சத்தியமஙலத்தில் உள்ள முன்னாள் மணல் வியாபாரி ஆறுமுகசாமியின் காகித ஆலையில் இரண்டாவது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.
- கடலூர் மாவட்டம் திருப்பதிரிப்புலியூரில் சசிகலாவின் ஜோதிடர் என கூறப்படும் சந்திரசேகர் வீட்டில் 3-வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.
- கோவையில் தொழிலதிபர்கள் ஓ.ஆறுமுகசாமி, சஜ்ஜீவனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்தது.
- ஜெயலலிதா, சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் வீட்டில் தொடர் சோதனை நடைபெற்றது.
- பாண்டியனின் மனைவி சங்கீதாவின் வங்கி லாக்கரிலிருந்து 90 சவரன் நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
- செந்திலின் தங்கை லாவண்யா வீட்டிலிருந்து இரண்டு பைகள் நிரம்ப ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
- செந்திலின் தொழில்பங்குதாரர் சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகம், கோழிப்பண்ணைகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேரவளனைய குழு உறுப்பினர் பாலசாமி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
- 6 இடங்களில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடர்கிறது.
- மிடாஸ் மதுபான ஆலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் 14 பேர், 7 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவினர் கைப்பற்றிய ஆவணங்களை சென்னைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு குழுவினர் மிடாஸில் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் அங்கு சோதனை நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.