சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை ரெய்டு :
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல மென்பொருள் நிறுவனத்தின் அலுவலங்கள் சென்னை தேனாம்பேட்டை, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் உள்ளன.
மென்பொருள் தொடர்பான இந்த நிறுவனத்தின், தேனாம்பேட்டை கிளை அலுவலகத்தில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றன. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
இதுதவிர வெளிநாடு பண பரிவர்த்தனையில் வீதி மீறல் நடைபெற்றதாகவும், கணக்குகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை தொடருமானால், இந்த விசாரணையில் முக்கிய புள்ளிகள் சிக்க வாய்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.