ஐ.டி. அதிகாரிகளின் சோதனை நேற்றே (நவ.2) கசிந்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. யார் அந்த கறுப்பு ஆடு என்பது குறித்து பார்ப்போம்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று (நவ.3) காலை சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னை மற்றும் திருவண்ணாமலை 80 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஐ.டி அதிகாரிகள் நேற்றே பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.டி. அதிகாரிகளின் வருகை குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. தமிழக அமைச்சர் ஒருவரின் வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளதாக அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. மேலும் இன்று, தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“