அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூர், ஈரோடு வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ஈரோடு ராமலிங்கம் இபிஎஸ் மகனின் சகலையின் தந்தை தான் ராமலிங்கம். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை செய்து வருகிறார்.
ஏற்கனவே 2016-ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ152 கோடி சிக்கியிருந்தது. இந்த வழக்கில்தான் ஏற்கனவே ராமலிங்கம் வீடுகளில் பல முறை வருமான வரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை ஈரோடு ராமலிங்கத்தின் சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூர் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இது உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
சென்னையில் மட்டும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. பூந்தமல்லி அடுத்த சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஜேடி மெட்டல் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்சன் மெட்டல் நிறுவனங்களில் சோதனை நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“