தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலை ஒட்டி சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் பணப் பட்டுவாடா நடக்க இருப்பதாக இன்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. வடசென்னைக்கு உள்பட நாடாளுமன்றத் தொகுதியில் பணப் பட்டுவாடா நடக்க இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஓட்டேரி, ஏழுகிணறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஏழுகிணறு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் சோதனை
நடைபெறுகிறது. மேலும், ஓட்டேரி அடுக்குமாடி குடியிருப்பு 3-வது ப்ளாக்கில் உள்ள ஒருவருடைய வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி மக்களுக்கு பணம், இலவசப் பொருட்கள் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
சந்தேகப்படும்படி அதிகப்படியான பணம், பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டடால் அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வர் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“