கோவை மாநகரில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையில் - பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவையில் கோடை மழை பரவலாக பெய்தது. கடந்த இரு தினங்களாக கோவையில் வெயில் வாட்டிய நிலையில் இன்று வழக்கம் போல் கோடை மழை பெய்ய தொடங்கியது.
Advertisment
கோவை மாநகரில் காந்திபுரம், ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலக பகுதி, உக்கடம், வடகோவை, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பல்வேறு இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பாதைசாரிகள் சிரமமடைந்தனர்.
Advertisment
Advertisements
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நிலையில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் போதிலும் கோவை மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு சாலைப்பணிகள் காரணமாக வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“