கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம். இவர்கள் இருவரும் இணைந்து கோவை காளப்பட்டி பகுதியில் கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் மற்றும் பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“