இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; பா.ஜ.கவின் மீது நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த பயத்தில் தான் இந்தியா கூட்டணி வலுக்குறைகிறது என்கின்றனர்.
இந்தியா கூட்டணி ஏதோ ஊராட்சி அல்லது சட்டப்பேரவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. ஒரே நோக்கம் பா.ஜ.க.,வை அகற்றி எல்லா கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். தி.மு.க.,வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் 5 வது இடத்தில் நாங்கள் உள்ளோம். வரிசைப்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
விஜய் அரசியல் வருகை குறித்து பேசும்போது; தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது. தமிழகம் என்கிற பெயரில் 21 கட்சி உள்ளது. பெயரை வைத்து, நடிகர் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியலை முடிவு செய்ய முடியாது, திடீர் என வந்து யாரும் எதையும் செய்து விட முடியாது. இருப்பினும் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“