இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நடந்தது. அப்பேது கட்சியின் மாநிலத் தலைவராக காதர் மொய்தீன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன்,“இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து பிரதமர் மோடியின் பேச்சில் குழப்பம் தெரிகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அவர்கள் தோல்வியை தழுவ போகிறார்கள் என்று அக்கட்சியினரே கூறுகிறார்கள்.
அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும். இஸ்லாமியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அ.தி.மு.க, பாரதிய ஜனதா கூட்டணி முறிவு ஒரு நாடகம்.
இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதில் தன்னால் இயன்றதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே வென்ற ராமநாதபுரத்துடன் திருச்சியையும் கேட்போம்” என்றார். மேலும் வேலூர் தொகுதியை இதுவரை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்டால் திமுக வழங்காமல் இருக்காது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“