J Anbazhagan Death updates : திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவர் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆவார்.
திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்து, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றையும் வெளியிட்டார்.
நாட்டுக்காக போராடி உயிரிழந்த இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, #CoronaVirus தடுப்பு பணிக்காக போராடி உயிரிழந்த என் சகோதரர் @JAnbazhagan-ன் தியாகம்! அவரது தியாக வாழ்வைப் போற்றுவோம்!
திராவிட இயக்கம் மறவாது #JAnbazhagan-ன் திருமுகத்தை! pic.twitter.com/s5SzLcXW3c
— M.K.Stalin (@mkstalin) June 10, 2020
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2ம் தேதி கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
MLA Anbazhagan Death Live updates : திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்பழகனின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது மற்ற துறையினரை சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
test 3 59834
AFDa; akmka;d a;kfjaj ajbkfadf ahbfa fabh
அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இளைஞரணி சார்பில் அன்பகத்தில் அவரின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். கழகபற்று, தலைமை மீதான விசுவாசம், உழைப்பு, ஆளுமை, அன்பு, அதிரடி… இக்கலவைகளின் மொத்த உருவான உங்களை நினைவிலேந்தி பயணிப்போம் அண்ணா!
சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு , அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை தயாரித்தபோது, விலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் மனதில் இனிமையானதாக நீங்காது இருக்கும். அவரோடு உரையாடியபோது கலை மீதும் திரைப்படங்கள் மீதும் அவரது பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கடும் துயர் மிக்க இந்த covid-19 சூழலில் அவரது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது அவர் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவரது மனிதத்தை என்னென்றும் சொல்லும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
– ஜெயம் ரவி
கொரோனாவுடன் போராடி உயிரிழந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏவின் மறைவு தனக்கு வருத்தம் அளிப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
அன்பழகன் குடுமத்தினருக்கும் நண்பர்களுக்கும் கட்சியினருக்கும் கேரள மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மறைவிற்கு ப.சிதம்பரம் இரங்கல்
இடையறாது தொண்டாற்றிய ஒரு போர் வீரனின் அகால மரணம் இது; அவருடைய குடும்பத்திற்கும், திமுகவினருக்கும் என் அனுதாபங்கள் – ப.சிதம்பரம்
கழகம், கலைஞர், தலைவரை தாண்டி வேறெதுவும் சிந்தித்தவரில்லை. நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் அண்ணா என்று ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கழகம், கலைஞர், தலைவரை தாண்டி வேறெதுவும் சிந்தித்தவரில்லை. மாநாடு, பொதுக்கூட்டம் என கழக பணிகளை கச்சிதமாக முடிக்கும் ஆற்றலாளர். கழகத்துக்கும், தலைவருக்கும் பேரிழப்பு. அன்பு அண்ணனின் தம்பியாக எனக்கு ஈடுசெய்ய முடியா இழப்பு. நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் அண்ணா, போய் வாருங்கள்” இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு, விழி நீரைப் பெருக்கி விடைபெற்றுக் கொண்டாய்; கண்ணீர் அஞ்சலி அன்பு தம்பி என்று இரங்கல் தெரிவித்துள்ளார். கே.என்.நேரு தனது டுவிட்டர் பக்கத்தில், “விழி நீரைப் பெருக்கி, விடைபெற்றுக் கொண்டாய்! அன்பு அன்பு என அனைவராலும் உச்சரிக்கப்படும் பேரன்பை இழந்தோம்… கண்ணீர் அஞ்சலி என் அன்பு தம்பி ஜெ.அன்பழகனுக்கு” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் முன்னோடி நிர்வாகியுமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவிலில் திமுக அலுவலகத்தில் மறைந்த ஜெ.அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக கழக நிர்வாகிகள் மற்றும் காட்டுமன்னார் கோவில் திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டு அன்பழகனுக்கு படத்திற்கு மரியாதை செய்தனர்.
கொரோனாவால் உயிரிழந்த ஜெ. அன்பழகனின் திருவுருவப்படம் திமுக அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கழக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்
ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவர் தந்தையான பழக்கடை ஜெயராமன் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்பழகனுக்கு அவரின் தந்தை மேல் அதிகப்படியான மரியாதையாம். அதனால், அவரின் கல்லறைக்கு அருகிலேயே அன்பழகன் உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தார் கோரிக்கை வைத்தனர்.
கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்.எல். ஏ ஜெ. அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் முழு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு வர முடியாமல் தவித்து வருவதாக சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. திநகர் மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அன்பழகனின் மறைவு அவரது குடும்பத்தார் மற்றும் உறவினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருக்கும் ஜெ.அன்பழகன் உடலை திநரில் இருக்கும் கண்ணம்மாபேட்டை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அனுமதி வழங்கினர். கண்ணம்மாபேட்டையில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “எப்போதும் சிரித்த முகம் கொண்ட ஜெ.அன்பழகன், இரும்பு நெஞ்சம் கொண்டவர். எதிர் கட்சியினரிடம் அவர் பழகும் விதம் பாராட்டுக்குரியது. மிகவும் துணிச்சல் கொண்டவர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக பணியாற்றினார். அன்பழகன் மறைந்தார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா தொற்றுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம் இழந்தார் தலைவர் ஸ்டாலின் இயக்கத்தார்க்கும், இல்லத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மறைவையொட்டி, 3 நாட்களுக்கு கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் எனவும், கழக நிகழ்ச்சிகள் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவிற்கு நடிகையும், அரசியல் கட்சி பிரமுகருமான குஷ்பூ இரங்கல் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, தனது டுவிட்டர் டிபி போட்டோவாக அன்பழகன் படத்தை வைத்துள்ளார்.
திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெ. அன்பழகன், இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாட இருந்தநிலையில், மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, திமுக கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெ.அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குடும்பத்தினருக்கும், சார்ந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி, தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.