ரத்த அழுத்தம், இதய செயல்பாடு சீராக இல்லை: ஜெ.அன்பழகன் ஹெல்த் ரிப்போர்ட்

90 சதவிகிதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

J. Anbazhagan, Dravida Munnetra Kazhagam, ஜெ அன்பழகன், dmk mla j anbazhagan, mla j anbazhagan, j anbazhagan dmk, j anbalagan dmk, anbazhagan dmk, anbazhagan

J. Anbazhagan DMK MLA Health Condition: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான ஜெ.அன்பழகன் தொகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்த நிலையில், அவருக்கு ஜூன் 2-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட  அறிக்கையில், “கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதய செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்று உள்ளது. சிறுநீரக செயல்பாடும் மோசமாக உள்ளது. கடந்த இரு தினங்களாக 40% ஆக்சிஜன் செலுத்தப்பட்டது நிலையில் தற்போது 90 சதவிகிதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: J anbazhagan mla dmk condition remains critical chennai covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com