/tamil-ie/media/media_files/uploads/2020/02/queen-thalaivi.jpg)
j deepa seeks ban on thalaivi queen, குயின், தலைவி, ஜெ.தீபா, thalaivi, queen, ramya krishnan, kangana ranaut, al vijay, j deepa appeals at high court
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடைவிதிக்க கோரி தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ‘குயின்’ என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி படம், குயின் இணையதள தொடர் எடுக்கப்படுவதாகவும் அவற்றுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில்
உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.