ஜெ.தீபா, ஆர்.கே.நகர் வேட்புமனுத் தாக்கலுக்கு புதிய ‘கெட்-அப்’பில் வந்தார். அவரது பழைய தோற்றத்தையும், புதிய ‘லுக்’கையும் ஒப்பிட்டு பேசியவர்கள் அதிகம்.

ஜெ.தீபா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்த ஜெ.தீபா, நடை உடை பாவனைகளில் கூடுமானவரை ஜெயலலிதாவை பின்பற்றினார்.
ஆனால் இன்று ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கலுக்கு வந்த ஜெ.தீபா, தலைமுடியை ஸ்டைலாக அலங்கரித்து, முன்னால் எடுத்து விட்டிருந்தார். காதில் பெரிய தோடு ஒன்றை அணிந்திருந்தார். உடையிலும் பழைய ஸ்டைலை மாற்றினார். அவரது வேட்புமனுத் தாக்கலுக்கு வந்தவர்கள் மத்தியில் இதுவே தனிப் பேச்சாக இருந்தது.

ஜெ.தீபா தன்னை ‘யூத்’தாக வெளிப்படுத்தி, இளம் வயதினரின் வாக்குகளை ஆர்.கே.நகரில் கவர முடிவு செய்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் இந்த கெட்-அப் மாற்றத்திற்கு விளக்கம் கொடுத்தனர்.