Advertisment

ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிக்கை… ஜெ. தீபா மனு தள்ளுபடி!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்கக் கோரிய ஜெ. தீபாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
J Deepa's petition dismissed it seeking to stay the auction of Jayalalitha assets in case, ஜெயலலிதா, ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிக்கை, ஜெ. தீபா மனு தள்ளுபடி, ஜெ. தீபா, Jayalalith niece J Deepa, Jayalalitha assets

ஜெ. தீபா

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்கக் கோரிய ஜெ. தீபாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டிருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என்று ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதே நேரத்தில், ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 பினாமி நிறுவனங்களில் 65 அசையும், அசையா சொத்துக்களின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பீட்டை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுமார் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் உள்ள ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்துக்களின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதாவின் நூற்றுக் கணக்கான சேலைகள், காலணிகள், கை கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றும் சட்டவிரோத சொத்து பட்டியலில் சேலைகள், காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம் விட உத்தரவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கில் உள்ள பணம் பற்றி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய தீபாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment