ஜாக்டோ ஜியோ போராட்டம் : 420 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு அதிரடி

28.01.2019 பணிக்கு திரும்பவில்லை என்றால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை

Jacto Geo Protest : தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசியர்கள், தங்களின் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

22ம் தேதி தொடங்கிய போராட்டம் 6 வது நாளாக இன்றும் நீடிக்கின்றது. இந்நிலையில் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jacto Geo Protest – ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

இந்நிலையில் நேற்று முதல் பணிக்கு வராத ஆசியர்களை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. மேலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

25ம் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 420 ஆசிரியர்களை கைது செய்தது காவல்துறை. கைதானவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். அரசு பணியாளர்கள் விதிகளின் படி, ஒருவர் கைதாகி 48 மணி நேரத்தை கடந்தால் அவரை சஸ்பெண்ட் செய்யலாம். அந்த விதிமுறையின் கீழ் 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாளைக்குள் (28.01.2019) பணிக்கு திரும்பவில்லை என்றால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வேலைக்கு திரும்பாவிடில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – ஜெயக்குமார்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close