பென்சன் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 1900-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 29-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது வரை 3000 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல ஆசிரியர்களை பணியில் சேர விடாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
"மாணவர்களின் நலன் கருதியும், அரசின் கோரிக்கையை ஏற்றும் தான் பணிக்குத் திரும்பினோம். ஆனாலும் எங்களை பழி வாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தங்களுக்குப் பிடிக்காதவர்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். சிலருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு, பின்பு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் ஆசியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.