ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 89.

Advertisment
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம்.
பாவலர் மீனாட்சி சுந்தரம் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர். தமிழக அரசு அரசுப் பள்ளிகளை மூடுவதைக் கைவிட்டு தனியார் பள்ளிகளைப் போல கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பேசி வந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மேலவை இருந்தபோது மேலவை உறுப்பினராக இருந்தவர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம். அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துவந்தார்.
சில நாட்களுக்கு முன்பு பாவலர் மீனாட்சி சுந்தரம் முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவ் அந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு, ஆசிரியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"