Advertisment

Jacto Geo Strike: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்! இன்று முதல் சாலை மறியலில் ஈடுபடும் ஊழியர்கள்

Government Employees Organization, Jacto Geo Strike Live Updates: இன்று பெருநகர சென்னை மாநகராட்சி முன்பு சாலை மறியல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jacto Geo Strike: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்! இன்று முதல் சாலை மறியலில் ஈடுபடும் ஊழியர்கள்

Association of State Government Employees Strike in Tamil Nadu: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (Jan.22) காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்திருக்கின்றனர்.

Advertisment

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நேற்று காலை 10:30 மணியளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, சங்கரபெருமாள், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெ.காந்திராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. நீதிமன்றமும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதை மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.

ஆகவே எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் நியாயமானது என்று நீதிமன்றமே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் எங்களுடைய போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எங்களுடைய போராட்டத்தை ஒடுக்க எத்தனிக்கிறார். அந்த ஒடுக்கு முறை, அடக்குமுறையை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மூலம் சுக்குநூறாக உடைக்கும். தலைமை செயலாளரின் அறிவிப்பையும் மீறி 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.

நாளை (இன்று) முதல் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை வென்று எடுக்காமல் வேலைநிறுத்தம் ஓயாது.

தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல், எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை ஏற்பது தான் ஒரே வழி. இந்த வேலைநிறுத்தத்துக்கு முழு காரணம் தமிழக அரசு தான். பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால், தலைமை செயலாளரின் அறிக்கையை ஒத்தி வைத்துவிட்டு, சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பொதுத்தேர்வை சந்திக்க இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனைத்து பாடங்களை நடத்தி முடித்து, தேர்வுக்கு தயார் செய்துவிட்டார்கள்.

ஆகவே எங்களுடைய போராட்டத்தால் அவர்களுடைய படிப்பு வீணாகாது. எங்களுடைய அமைப்பில் உள்ள 165 சங்கங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 7 லட்சம் பேரும், ஆசிரியர்கள் 5 லட்சம் பேரும் இருக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் நாளை மறுதினம் (ஜன.25) வரை 3 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இன்று பெருநகர சென்னை மாநகராட்சி முன்பும், நாளை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், நாளை மறுதினம் எழிலகம் முன்பும் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்து இருக்கின்றனர்.

இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல் தரப்பில் முறையிடப்பட்டது. இதுதொடர்பான வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

Jacto Geo Strike Live: ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் சாலை மறியல்

10:40 AM - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர்ககளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

09:45 AM - சென்னையைப்போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபடுவதால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment