Advertisment

ஜாக்டோ- ஜியோ அமைப்புடன் 3 அமைச்சர்கள் பேச்சு வார்த்தை: தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் வாபஸ்

3 அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, வருகிற 11ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Jacto Jio protest temporary withdraw Tamil News

 Jacto Jio withdraw protest temporarily against Tamilnadu government Tamil News

Jacto Jio News in Tamil: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisment

கடந்த 2ம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஏப்ரல் 11ம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததோடு, போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தியதாகவும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment