ஜாக்டோ ஜியோ அமைப்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு அரசு இன்று(பிப்.13) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“