Advertisment

ஐபோனை உடைத்தெறிந்த ஜாஃபர் சாதிக்; அமீருடன் அறிமுகம் ஏற்பட்டது எப்படி? குற்றப் பத்திரிகையில் தகவல்

ரூ.2 ஆயிரம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் மீதான குற்றப் பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Drug case former DMK functionary Jaffer Sadiq arrested by NCB Tamil News

ஜாஃபர் சாதிக் தனது 2 ஐபோன்களை உடைத்து நேப்பியார் பாலத்தில் வீசியதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Jaffer Sadiq | டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருள்கள் சிக்கியது.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில் அவரை போலீசார் ஜெய்ப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஜாஃபர் சாதிக் தனது 2 ஐபோன்களை உடைத்து நேப்பியார் பாலத்தில் வீசினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தியுள்ளார் என்றும் 2014ஆம் ஆண்டு முஸ்தபா என்பவர் மூலம் ஜாஃபர் சாதிக்குடன் இயக்குனர் அமீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Jaffer Sadiq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment