Advertisment

வன்னியர் அமைப்பு புகார்: சூர்யா- ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

Jai Bhim issue,court,actor surya,jyotika: ஜெய் பீம் படம் விவகாரத்தில், ருத்ர வன்னியர் சேனா அமைப்பு அளித்த புகாரின் பேரில், அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா வழக்குப் பதிவு செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Jaibhim, Suyra, Jyothika, Case File, Court, actor surya, jyotika, Jai Bhim Controversy, Jai Bhim, tamil cinema,ஜெய்பீம், சூர்யா, ஜோதிகா, இயக்குனர், ஞானவேல், வழக்கு, நீதிமன்றம், உத்தரவு, வழக்கு கோப்பு, ஜெய் பீம் சர்ச்சை, ஜெய் பீம்,தமிழ் சினிமா, வன்னியர் சங்கம், vanniyar sangam, jai bhim, jai bhim movie

court orders to file case against actor surya, jyothika for jai bhim film issue: சாதி, மத கலவரத்தை தூண்டும் வகையில், ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ருத்ர வன்னியர் சேனா அமைப்பு அளித்த புகாரில் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

1993 இல் கடலூர் மாவட்டத்தில், முதனை கிராமத்தில், பழங்குடியினரான இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடி வெளியே கொண்டு வந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்தபோது வாதாடி நீதி பெற்று தந்தார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையாக புனையப்பட்டு, இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் மணிகண்டன் நடிப்பில், ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. ஜெய் பீம் படம் கடந்த ஆண்டு ஒ.டி.டி-யில் வெளியானது. இந்த திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

ஜெய் பீம் திரைப்படத்தில், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை காவல் ஆய்வாளர் குருமூர்த்தி தாக்கியதில் இறந்து போகிறார். இதில், போலீஸ் வேடத்தில் நடித்த குருமூர்த்தியின் வீட்டில், இருந்த காலண்டரில் அக்னிகலசம் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம், வன்னியர்களின் அக்னி கலசம் இடம்பெற்றிருந்ததாகவும் வன்னியர்களின் தலைவரான மறைந்த ஜெ. குருவின் பெயரை குறிப்பிடும் விதமாக வில்லன் கதாபாத்திரத்துக்கு குரு மூர்த்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வன்னியர்களை வன்முறையாளர்களாக தவறாக சித்தரிப்பதாகக் கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஜெய் பீம் படம் சர்ச்சையானது. ஆனால், இந்த படம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஜெய் பீம் படம் விவகாரம் தொடர்பாக, ருத்ர வன்னியர் சேனா அமைப்பு, சாதி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிராக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தித்தது.

இந்த நிலையில், ருத்ர வன்னியர் சேனா அமைப்பு, அளித்தப் புகாரின் பேரில், ஜெய் பீம் படத் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்தில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தேசப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், சாதி மதக் கலவரத்தை உருவாக்கும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டம், மகாலட்சுமி, வன்னியர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதமாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்று, அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து அந்த பணத்தில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாய் காட்டி கிறிஸ்தவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலாவணி குற்றம் செய்யப்பட்டுள்ளது. அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து, ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ருத்ர வன்னியர் சேனா அமைபின் தலைவர் சந்தோஷ் நாயகர் அளித்த மனுவை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-இல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை மே 20-இல் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஜெய் பீம் படம் சர்ச்சை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Jyothika Surya Vanniyar Jai Bhim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment