Advertisment

10,000 பேர் சூர்யா வீடு முன்பு திரண்டால் என்ன செய்வார்? காடுவெட்டி குரு மகன் எச்சரிக்கை

Kaadu Vetti guru son Kanal Arasan warns Suriya and ‘Jai Bhim’ Director Gnanavel raja Tamil News: சூர்யாவின் வீட்ற்கு முன்னால் 10,000 பேர் ஒன்று திரண்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்றும், 5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என்றும் காடுவெட்டி குருவின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jai Bhim movie Tamil News: Kanal Arasan warns Suriya and Gnanavel raja

 Kanal Arasan Tamil News: நடிகர் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும், இந்தப் படத்தில் வன்னிய சமுதாயத்தினரை தவற சித்தரித்துள்ளதாக வன்னியர் சங்களும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment
publive-image

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாவட்ட செயலாளர், சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அவர் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

publive-image

காடுவெட்டி குரு

இந்நிலையில், சூர்யாவின் வீட்ற்கு முன்னால் 10,000 பேர் ஒன்று திரண்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்றும், 5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என்றும் காடுவெட்டி குருவின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

publive-image

மறைந்த பாமக நிர்வாகி காடுவெட்டி குருவின் மூத்த மகன் கனல் அரசன். மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வரும் இவர் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக, அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் வீட்ற்கு முன்னால் 10,000 பேர் ஒன்று திரண்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது.

ஜெய்பீம் படத்தில், அந்த குறிப்பிட்ட காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை. வன்னிய சமூக மக்களை புண்படுத்திய மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது; எந்தப் படமும் எடுக்க முடியாது. இயக்குனர் ஞானவேல் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வன்னியர் சங்கதினரும், அரசியல் கட்சியினரும், பரபரப்பான கருத்தை தெரிவித்து வரும் நிலையில், தற்போது கனல் அரசன் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Tamilnadu Surya Tamilnadu News Update Tamilnadu News Latest Anbumani Ramadoss Pmk Jai Bhim Kaduvetti Guru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment