அடங்காத திமில்...! அசராத திமிர்...! பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு! ஸ்பெஷல் புகைப்படங்கள்

தகுதியுடைய காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், அலங்காநல்லூரில் அனல் பறந்தது

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

முதலில் 3 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை, தேனி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் களம் இறக்கப்பட்டன.

இம்முறை, தகுதியுடைய காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், களத்தில் அனல் பறந்தது. மாடுபிடி வீரர்களுக்கு கடும் சவாலாக பெரும்பாலான காளைகள் விளங்கின. வீரர்கள் திமிலை பிடித்தும் அடங்காத காளைகள் குதிரையைப் போல எகிறி குதித்து மரண மாஸ் காட்டி அசத்தின.

வீரர்களும், சற்றும் சோடை போகாமல் மீண்டும் மீண்டும் காளைகளை வீரம் கொண்டு அடக்குவதில் உறுதியாக இருந்தனர். வழக்கத்தைவிட இம்முறை அனல் பறந்த அலங்காநல்லூர் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close