Jallikattu ground selection process starts in Madurai: மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்ட மைதானம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைக்குளம் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லுரர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உட்பட பல்வேறு கிரமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலககளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இப்போட்டிகளை காண தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு உலகநாடுகளில் இருந்து பொதுமக்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு வருகின்றனர். இத்தகைய பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டினை மேலும் உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஜல்லிக்கட்டுக்கென்று பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைக்குளம் ஆகிய கிராமங்களில் மாவட்ட அட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்துாரி ஆகியோர் மைதானத்திற்கு தேவையான இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள்: குறைந்தபட்ச கட்டணம் 3 மடங்கு உயர்வு; பல்லவன் எக்ஸ்பிரஸ்… திருச்சி ரயில் பயணிகள் கோரிக்கை பற்றி முக்கிய ஆய்வு
மேலும், மைதானத்திற்கு வரும் சாலைகள் மற்றும் அடிப்படை தேவைகள் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். மைதானம் அமைவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்தஆய்வின்போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராசு, வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மணி, மதுரை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.